டயபிட்டீஸ் GPS என்றால் என்ன?

கனேடிய டயபிட்டீஸ் அஸோசியேஷன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உபயோகமான தகவல், ஆதரவு மற்றும் மூலவளங்களைத் தருகிறது – இது ஒரு தொலைபேசி, ஒரு விலாசம், அல்லது ஒரு கம்ப்யூட்டர் உள்ள கனடாவின் எந்தப் பகுதியிலும் கிடைக்கப்பெறும். எமது 1-800-BANTING அல்லது diabetes.ca என்ற இணையத்தளத்தின் ஊடாக விரிவான அளவிலும் இலகுவாகக் கிடைக்கக்கூடியதாகவும் இது உள்ளது. டயபிட்டீஸ் GPS என்பது, பல்வேறு மொழிகளில் கலாச்சாரப் பொருத்தம் கொண்ட தகவல்களையும் மூலவழங்களையும் தருவதற்காக அஸோசியேஷனால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும்.

பொதுப்படையான தகவலை சுயமாகக் கற்றுக்கொள்ளும் முறையில் வழங்குவதே டயபிட்டீஸ் GPS இன் நோக்கமாகும். உங்கள் நீரிழிவு நோயை சமாளிப்பது பற்றிய குறிப்பான தகவலுக்கு, உங்கள் உடல்நல பராமரிப்புக் குழுவின் அங்கத்தவர் ஒருவரிடம் பேசவும்.

நீரிழிவு நோயுடன் வாழ்பவர்கள்; அஸோசியேஷன் பணியாளர்; உடல்நலப்பராமரிப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய பல்துறை ஆலோசனை குழுவால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது வன்கூவர் BC யில் அமைந்துள்ள அஸோசியேஷனின் சீன ஆலோசனைக் குழுவின் முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகும். டயபிட்டீஸ் GPS இன் உள்ளடக்கமானது தேசீய சத்துணவுக் குழு மற்றும் தேசீய சத்துணவுக் கல்விக் குழு ஆகியவற்றின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது.