சொற்களஞ்சியம்
A1C பரிசோதனை
A1C பரிசோதனை கடந்த 120 நாட்களில் உங்களுடைய மொத்த இரத்தக் குளுக்கோஸின் அளவுகளின் சராசரியைக் காட்டும் ஒரு இரத்தப் பரிசோதனை.இரத்தக் குளுக்கோஸ்:
இரத்தக் குளுக்கோஸ் என்பது இரத்தத்தில் காணப்படும் குளுக்கோஸின் (சக்கரை) அளவுகாபோஹைட்ரேட்
காபோஹைட்ரேட் என்பது உணவில் காணப்படும் மூன்று பிரதான ஊட்டச்சத்துக்களில் ஒன்று. மாச்சத்து, பழம், பாற்பொருட்கள், சில மரக்கறிகள் என்பனவற்றில் காபோஹைட்ரேட் இருக்கிறது. உங்களுடைய உடலில், சக்திக்காக காபோஹைட்ரேட் தேவைப்படுகிறது. உங்களுடைய உடல் அவற்றை குளுக்கோஸ் என அழைக்கப்படும் ஒரு சக்கரையாக மாற்றுகிறது.

இரத்தக் கொழுப்பு (கொலஸ்ட்ரோல்)
இரத்தக் கொழுப்பு என்பது உங்களுடைய இரத்தத்திலும் உயிரணுக்களிலும் இயல்பாகக் காணப்படும் ஒரு கொழுப்புப் பொருள். இரண்டு பிரதான வகையான இரத்தக் கொழுப்புகள் இருக்கின்றன. அவையாவன: LDL மற்றும் HDL.

LDL [(லோ-டென்சிட்டி லிப்போபுரோட்டின்/குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரதம்)] இது பெரும்பாலும் “கெட்ட” இரத்தக் கொழுப்பு என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதனுடைய அளவு அதிகமாகும்போது, அது இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிகரிக்கும்.

HDL (ஹை-டென்சிட்டி லிப்போபுரோட்டின்/உயர்ந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரதம்) பெரும்பாலும் “நல்ல” இரத்தக் கொழுப்பு என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதனுடைய அளவு அதிகமாகும்போது, அது இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம்.

நார்ச்சத்து
நார்ச்சத்தில் பின்வரும் இரண்டு வகைகள் இருக்கின்றன. கரையும் தன்மையற்ற நார்ச்சத்து ஒரு பஞ்சைப் போல செயற்படும். உணவு குடலினூடாகச் செல்லும்போது, அது தண்ணீரை உறிஞ்சி, மலம் வெளியேற உதவி செய்து மலச்சிக்கலிலிருந்து விடுவிக்கிறது. கோதுமைத் தவிடும் முழுத் தானியங்களும் கரையும் தன்மையற்ற நார்ச்சத்தை அதிகளவில் கொண்டிருக்கின்றன. அதைப்போலவே அநேகமான பழங்களின் தோல்களும் மரக்கறிகளும் கரையும் தன்மையற்ற நார்ச்சத்தை அதிகளவில் கொண்டிருக்கின்றன. விதைகளும் கரையும் தன்மையற்ற நார்ச்சத்தைப் பெருமளவில் கொண்டிருக்கின்றன. உணவுப் பொருட்கள் அரைத்தல், தோல் உரித்தல், வேகவைத்தல், சாறு பிழிதல் போன்ற செயற்பாடுகளினால் சுத்திகரிக்கப்படும்போது அல்லது பதப்படுத்தப்படும்போது அவற்றிலுள்ள நார்ச்சத்தின் அளவு குறைக்கப்படுகிறது. கரையும் தன்மையற்ற நார்ச்சத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சுத்திகரிக்கப்படாத உணவுகளை அதிகளவு உட்கொள்ளவும். கரையும் தன்மையுள்ள நார்ச்சத்து சமிபாட்டுக் குழாயினூடாகச் செல்லும்போது ஒரு ஜெல்லை உருவாக்கி உடைகிறது. இந்த ஜெல் ‘கெட்ட’ கொழுப்பைச் சிறைப்பிடித்து இரத்த ஓட்டத்துக்குப் புறம்பாக வைக்கிறது. இது இருதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கலாம். கரையும் தன்மையுள்ள நார்ச்சத்து, குவார் கம் போன்ற கம்களையும் ஜெலியையும் தயாரிப்பதற்கு உபயோகிக்கும் பெக்டினை உள்ளடக்குகிறது. இது ஓட்ஸ், பட்டாணி, அவரை, பருப்பு, சில விதைகள், பிரவுன் நிற அரிசி, பார்லி, (அப்பிள் போன்ற) பழங்கள், (புரொக்கோலி போன்ற) சில பச்சை நிற மரக்கறிகள், உருளைக் கிழங்கு என்பனவற்றில் காணப்படுகின்றன.

குளுக்கோஸ்
உங்களுடைய உடல் காபோஹைட்ரேட்டை குளுக்கோஸ் என அழைக்கப்படும் ஒரு சீனியாக மாற்றுகிறது. நீரிழிவு நோயாளிகள் காபோஹைட்ரேட்டின் சரியான வகைகளையும் சரியான அளவுகளையும் உட்கொள்வது முக்கியம்.

கரையும் தன்மையற்ற நார்ச்சத்து
கரையும் தன்மையற்ற நார்ச்சத்து ஒரு பஞ்சைப் போல செயற்படும். உணவு குடலினூடாகச் செல்லும்போது, அது தண்ணீரை உறிஞ்சி, மலம் வெளியேற உதவி செய்து மலச்சிக்கலிலிருந்து விடுவிக்கிறது. கோதுமைத் தவிடும் முழுத் தானியங்களும் கரையும் தன்மையற்ற நார்ச்சத்தை அதிகளவில் கொண்டிருக்கின்றன. அதைப்போலவே அநேகமான பழங்களின் தோல்களும் மரக்கறிகளும் கரையும் தன்மையற்ற நார்ச்சத்தை அதிகளவில் கொண்டிருக்கின்றன. விதைகளும் கரையும் தன்மையற்ற நார்ச்சத்தைப் பெருமளவில் கொண்டிருக்கின்றன. உணவுப் பொருட்கள் அரைத்தல், தோல் உரித்தல், வேகவைத்தல், சாறு பிழிதல் போன்ற செயற்பாடுகளினால் சுத்திகரிக்கப்படும்போது அல்லது பதப்படுத்தப்படும்போது அவற்றிலுள்ள நார்ச்சத்தின் அளவு குறைக்கப்படுகிறது. கரையும் தன்மையற்ற நார்ச்சத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சுத்திகரிக்கப்படாத உணவுகளை அதிகளவு உட்கொள்ளவும்.

இன்சுலின்
இன்சுலின் என்பது இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக கணையத்தினால் சுரக்கப்படும் ஒரு ஹோர்மோன். நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு, கணையம் இன்சுலினைச் சுரக்காது அல்லது போதியளவு சுரக்காது: அல்லது அது சுரக்கும் இன்சுலினை பலன் தரும் விதத்தில் உபயோகிக்க முடியாமலிருக்கலாம். இதன் விளைவாக, குளுக்கோஸ் இரத்தக் குழாய்களில் தங்கி, பார்வையின்மை, இதய நோய், சிறுநீரகப் பிரச்சினைகள், உறுப்பு நீக்குதல், நரம்புகள் சேதமடைதல், ஆண்குறி ஓங்கற் பிசகு போன்ற உடற் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

மிதமான ஏரோபிக் செயற்பாடு
மிதமான ஏரோபிக் செயற்பாடு உங்களை கடினமாகச் சுவாசிக்கவும் உங்களுடைய இருதயத்தைவேகமாகத் துடிக்கவும் செய்ய வைக்கிறது. உங்களால் பேச முடியவேண்டும், ஆனால் பாட முடியாதவாறு இருக்கவேண்டும். உதாரணங்கள் விரைவாக நடத்தல், ஸ்கேட்டிங், மிதிவண்டி ஓட்டுதல் என்பனவற்றை உட்படுத்தும்.


கணையம்
கணையம் என்பது சமிபாட்டுத் தொகுதியின் ஒரு உறுப்பு. இது உணவுகளையும் இன்சுலினையும் உடைக்ககூடிய நொதியைச் சுரக்கிறது. இது, இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தும் ஹோர்மோன் ஆகும். நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு, கணையம் இன்சுலினைச் சுரக்காது அல்லது போதியளவு சுரக்காது: அல்லது அது சுரக்கும் இன்சுலினை பலன் தரும் விதத்தில் உபயோகிக்க முடியாமலிருக்கலாம்.


சச்சுரேட்டட் கொழுப்புக்கள்
சச்சுரேட்டட் கொழுப்புக்கள்: பட்டர், கோழியின் தோல் போன்ற பெரும்பாலான சச்சுரேட்டட் கொழுப்புகள் அறை வெப்பநிலையில் கட்டியானதாக இருக்கும். இந்தக் கொழுப்புகள் இரத்தக்கொழுப்பை (கொலஸ்டிரோல்) அதிக அளவில் கொண்டிருக்கின்றன.

கரையும் தன்மையுள்ள நார்ச்சத்து
கரையும் தன்மையுள்ள நார்ச்சத்து சமிபாட்டுக் குழாயினூடாகச் செல்லும்போது ஒரு ஜெல்லை உருவாக்கி உடைகிறது. இந்த ஜெல் ‘கெட்ட’ கொழுப்பைச் சிறைப்பிடித்து இரத்த ஓட்டத்துக்குப் புறம்பாக வைக்கிறது. இது இருதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கலாம். கரையும் தன்மையுள்ள நார்ச்சத்து, குவார் கம் போன்ற கம்களையும் ஜெலியையும் தயாரிப்பதற்கு உபயோகிக்கும் பெக்டினை உள்ளடக்குகிறது. இது ஓட்ஸ், பட்டாணி, அவரை, பருப்பு, சில விதைகள், பிரவுன் நிற அரிசி, பார்லி, (அப்பிள் போன்ற) பழங்கள், (புரொக்கோலி போன்ற) சில பச்சை நிற மரக்கறிகள், உருளைக் கிழங்கு என்பனவற்றில் காணப்படுகின்றன.


ட்ரான்ஸ் கொழுப்புக்கள்
ட்ரான்ஸ் கொழுப்புக்கள்: ட்ரான்ஸ் கொழுப்பு என்பது, ஒரு தாவரத் திரவ எண்ணெய் கொழுப்பின் திட வடிவமாக மாற்றப்படும்போது உருவாக்கப்படும் ஒரு விதமான கொழுப்பு ஆகும். இந்தக் கொழுப்பினால் உணவின் சுவையையும் தன்மையையும் முன்னேற்றுவிக்க முடியும் என்பதாலும் உணவை நீண்ட காலத்துக்குக் கெட்டுப்போகாது புதிய நிலையில் வைக்க முடியும் என்பதாலும் இது பெரும்பாலும் பதப்படுத்தப்படும் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. ஆயினும், ட்ரான்ஸ் கொழுப்பு உணவில் தேவைப்படும் ஒரு கொழுப்பல்ல. இது LDL (கெட்ட) கொழுப்பை அதிகரிக்கவும் HDL (நல்ல) கொழுப்பைக் குறைக்கவும் செய்வதால் இது இருதய நோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரைக்கிளிசெரைட்கள்
ரைக்கிளிசெரைட்கள்: ரைக்கிளிசெரைட்கள் என்பது உங்களுடைய இரத்தத்தில் காணப்படும் கொழுப்பின் ஒரு வடிவமாகும். இதை சீனி, மதுபானம், வேறு சில உணவுகளிலிருந்து உங்களுடைய உடல் உருவாக்குகிறது. ரைக்கிளிசெரைட்டுகள் அளவுக்கதிகமாக உங்களுடைய இரத்தத்தில் காணப்படும்போது அவை இரத்தக் குழாய்களை கடினமாகவும் குறுகியதாகவும் ஆக்கலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் இருக்கும்போது ரைக்கிளிசெரைட்டுக்களின் அளவுகளும் அதிகளவில் அதிகரிக்கக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது. இது இருதய நோயை உருவாக்கும் ஆபத்தையும் அதிகரிக்கலாம்.

தீவிரமான ஏரோபிக் செயற்பாடு
தீவிரமான ஏரோபிக் செயற்பாடு உங்களுடைய இதயத் துடிப்பின் வீதத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கச் செய்யும். உங்களுடைய மூச்சைப் பிடிக்காமல் ஒரு சில வார்த்தைகளுக்கு மேலாக உங்களால் பேச முடியாதவாறு இருக்கவேண்டும். உதாரணங்கள் ஓடுதல், கூடைப்பந்தாட்டம், சோக்கர், குறஸ்-கன்ட்ரி பனிச் சறுக்குதல் என்பனவற்றை உட்படுத்தும்.