become a fan on facebook  follow us on twitter  subscribe for updates  subscribe for updates


முக்கியமான இந்தத் தகவலை அறிந்து கொள்ளவும்:
இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு (கொலஸ்டிரோல்), நீரிழிவு போன்ற நோய்களை சமாளித்தல்

நீரிழிவு நோயுள்ள மக்களுக்கு மாரடைப்பு, பாரிசவாதம் (ஸ்ட்ரோக்), கால்களின் கீழ்ப்பகுதிகளிலும் பாதங்களிலும் குறைவான இரத்தோட்டம் போன்ற ஆபத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

நீரிழிவு நோயுள்ள ஒருவருக்கு இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய வேறு காரணிகளும் இருக்கின்றன. அவை பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • புகை பிடித்தல்
  • உயர் இரத்தக்கொழுப்பைக் கொண்டிருத்தல்
  • உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருத்தல்
  • குடும்ப வழியில் இருதய நோயைக் கொண்டிருத்தல்
  • உடல் எடை கூடுதலாக இருத்தல் அல்லது உடற் செயற்பாடு குறைவாக இருத்தல்
  • அதிகளவு மன உளைச்சலுடன் வாழ்தல்

உங்களுடைய நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு என்பனவற்றை நன்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் உங்களுடைய இதயத்தையும் இரத்தோட்டத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மாரடைப்பு அல்லது பாரிசவாதம் ஏற்படக் காரணம் என்ன?

எமது இரத்தக் குழாய்கள், ஒக்சிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் இருதயத்துக்கும் மூளைக்கும் எடுத்துச் செல்கின்றன. ஒரு இரத்தக்குழாய் முழுமையாக அடைபடும்போது, இரத்தத்திலிருந்து ஒக்சிஜனும் ஊட்டச்சத்தும் கிடைக்காததால் திசுக்கள்(இழையம்) இறக்கத் தொடங்குகின்றன. அந்த சமயத்தில் மாரடைப்பு அல்லது பாரிசவாதம் ஏற்படுகிறது.

இரத்தக்குழாயின் ஒரு பகுதி மாத்திரம் அடைக்கப்படும்போது, அது இருதயத்தைச் சுற்றி மார்புவலியை(அஞ்ஜைனா) ஏற்படுத்தலாம். அல்லது, அது மூளையில் சிறிய அளவிலான பாரிசவாதத்தை(மினி-ஸ்ட்ரோக்) ஏற்படுத்தலாம். காலப்போக்கில், பகுதியாக அடைக்கப்பட்ட இந்த இரத்தக் குழாய்கள் முற்றாக அடைக்கப்படலாம். சிறிய இரத்தக் குழாய்களில் குறைவான இரத்தோட்டம், கண், நரம்பு, சிறுநீரக நோய் போன்ற நீரிழிவு நோயின் சிக்கலான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.