become a fan on facebook  follow us on twitter  subscribe for updates  subscribe for updates


வெளியிடங்களில் உணவருந்துதல்

வெளியிடங்களில் உணவருந்துதல்: நீங்கள் வெளியிடங்களில் உணவருந்தும்போது ஆரோக்கியமான உணவுகளைத் தெரிவு செய்தல்

இன்றைய காலகட்டத்தில்இ வெளியிடங்களில் உணவருந்துவது என்பது பெரும்பாலான மக்களின் வாழ்க்கையின் ஒரு வழக்கமாகிவிட்டது. வேலைக்குப் போகும்போது எம்முடைய சொந்த உணவைப் பொதிகட்டிக் கொண்டுபோனாலும் அடிக்கடி உணவகங்ககளிலும் உணவருந்துகிறோம்.;;; அல்லது உணவு விற்பனை நிலையங்களில் வாங்கி உண்போம்;.

வெளியிடங்களில் உணவருந்தும்போது ஆரோக்கியமான உணவுகளைத் தெரிவு செய்வதுஇ நீரிழிவு நோயைச் சமாளிக்க உதவலாம்; அத்துடன்இ நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தாமதப்படுத்தலாம்.

சரியான சமநிலை உணவையும் தகுந்த பரிமாறும் அளவையும் தெரிந்துகொள்தல்

கனடாவின் உணவு வழிகாட்டியில் பின்வரும் நான்கு பிரதானமான உணவு வகைகளைக்காணலாம்.

மரக்கறிகளும் பழங்களும்
தானியப் பொருட்கள்
பாலும் மாற்றுணவுகளும்
இறைச்சியும் மாற்றுணவுகளும்

எல்லா உணவு வகைகளிலிருந்தும் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது உங்களுடைய உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றது. ஒரு சமநிலை உணவாக கனடாவின் உணவு வழிகாட்டியிலுள்ள 4 உணவு வகைகளில் குறைந்த பட்சம் 3 ன்றையாவது எடுக்கவும். ஒரு சிற்றுண்டியாக 4 வகையிலும் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வகை உணவுகளை உட்கொள்ளவும்.

தகுந்த சமநிலையான உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பிளேட் மெத்தெட் உங்களுக்கு உதவும்;.

சாப்பிடுவது எந்த வகை எந்த அளவு என்பதைக் கவனிப்போம்

வெளியிடங்களில் உணவுகள் வகை வகையாக பெரும்பாலும் மிக அதிகளவு பரிமாறப்படும். உங்கள் தேவையை ஹன்டி போர்ஷன் கைட் அதாவது கையடக்க வழிகாட்டிப் படி எடுக்கவும். பரிமாறப்படும் அளவுஇ உங்களுடைய வழக்கமான அளவை விடக் குறைவானதாகவோ அல்லது அதிகமானதாகவோ இருந்தால்இ உங்களுடைய இரத்தக் குளுக்கோஸின் அளவை நிலையானதாக வைத்துக்கொள்வதற்காகஇ உங்களுடைய உணவு வகையில்இ உங்களுடைய இன்சுலின் அளவில்இ அல்லது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் அளவில் மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும். ஒரு உணவகத்திpல்இ உங்களுடைய மீதியாகும் உணவைப் பொதி செய்து தரும்படி கேட்கலாம்இ இன்னொருவருடன் உங்களுடைய உணவைப் பகிர்ந்துகொள்ளலாம்இ அல்லது பாதி உணவைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.